Post by Thiru
- Mar 23, 2018
'பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடியில் தமிழ்பேசும் முஸ்லீம்கள்'  என்ற தலைப்பில் நேற்று (22.03.2018) ஸ்காபுறோ ...

உச்சிதொடங்கி உள்ளங்கால் வரை வியர்த்துக்
கொட்டியது. நீர்த்திவலைகளையெல்லாம்
துடைத்தவளாக அந்தத் தாய் அவனைப் படுக்கை
யினின்றும் எழுப்பியிருத்துகிறாள். ஒட்டி உலர்ந்த
அந்த உடலின் மூட்டுக்களெல்லாம் முடிச்சாய்த் தெரி
கின்றன. உயிரைத் தக்கவைத்துக் கொள்ளும்
எலும்புக்கூடு, தசைக்கோளங்கள் வற்றி வடிந்திருந்தன.
துணியில் சுற்றிய விறகுக் கட்யையைப் போல
உருவம். தொண்டைக் குழியிலிருந்தும் உயிரின்
அசைவாக தீனக்குரலில் முனகல்.
இன்றா நேற்றா? இரண்டு மாதங்களாக இதே
அவஸ்தை. சுருங்கிப்போன அந்தக் கழுத்தில்
அம்மியைப் போல தாயத்தும், கையில்
குளவியைப்போல சுற்றிக் கட்டப்பட்ட ஷஷஅச்சரக்||கூடும்.
அந்த உருவத்துக்குப் பாரச்சுமையை
ஏற்றிவைத்ததைப்போல....
ஷஷலொக்....க்.... லொக்.... லொக்....ம்ஹ்||
இருமும் போது அவன் மார்பு இரண்டாக
வளைந்து மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது.
அடித்தொண்டையினின்றும் வெளிவரும் கோளையைக்
காறித்துப்பியதும் அவனடையும் அமைதி, அடுத்த
கணமே ஆரம்பமாகப் போகும் மரண அவஸ்தையின்
அடையாளமாக.
நெஞ்சிலே சாய்திருந்த மகனைத் தலைக்கும்
இடுப்பிற்குமாகத் தலை அணையை வைத்து,
சுவரிலே சாத்திய பொன்னம்மாள், பாயை உதறி
மீண்டும் படுக்கையில் போட்டாள். அந்தப்
படுக்கையைச் சுற்றிக் கற்பூரச் சட்டியும் வேப்பங்
குழையும் காவலாகக் கிடக்கின்றன. அந்தப்
படுக்கைக்கு நேர் எதிரே இறப்பில் கதிர்காமக்
கந்தனுக்குக் காணிக்கையாகக் கட்டின குத்திக்காசு
வெள்ளைத் துணியில் உறங்கியது.
அந்த மகனின் தலையைச் சுற்றி
ஷஷநேர்த்திக்கடன்|| செய்த ஷஷபாணிச்சாவலும்,
வெள்ளப்போடும்|| வாசலில் சுகதேகிகளாக
இரைக்காக் கிளறிக் கொண்டிருந்தன. பொன்னம்மாள்
துப்பட்டியை எடுத்துப் போர்த்திவிட்டாள். மகனின்
கண்கள் பனிப்பதைக் கண்டவள்....
ஷஷஎன்னெ ராசா செய்யிது?|| தாய்மை
துடித்தது.
ஷஷநெஞ்சிக்குள்ளே முள்ளப்போட்டு
இழுகிறாப்லெ இருக்கம்மா!|| இவ்வளவும்
சொல்வதற்குள் அவன் உயிர் போய்த் திரும்பிய
தைப்போல, முக்கி முணகிக் கொண்டே மீண்டும்
புரண்டு படுத்தான். மகனின் வேதனையில்
பொன்னம்மாளின் ஈரற்குலை, நெருப்பில் விழுந்த
புழுப்போல நெளிந்து துடித்தது.
என்றும்போல அன்றும் கிருஷ;ணன்
கிண்ணடியப் பள்ளிக்கூடத்திற்குப் போய் வீடு
திரும்பிக் கொண்டிருக்கும் போது - கோடை
மழையில் நன்றாக நனைந்து வந்து -
ஷஷமேலெல்லாம் உளையுதம்மா|| என்று பாயில்
படுத்தவன்தான். காலையில் எழும்பும்போது
தும்மலுடன் கண் விழித்தான். அதற்குப்பிறகு தடிமல்,
காய்ச்சல், இருமல் என்று அவனுடைய நோய்க்குப்
பல பெயர்கள் வைத்துச் சொன்னார்கள். நோயின்
பெயர் மாறினாலும் உடல் மட்டும் சுகப்பட்டு
வரவேயில்லை. மாதங்கள் மூன்று மூச்சு விடாமல்
கரைந்துவிட்டது. அவனது உடலைப்போல.
பொன்னம்மாள் தனக்குத் தெரிந்த நாட்டு
வைத்தியம் முழுவதையும் அவன்மீது பிரயோகித்துப்
பார்த்து.... தோல்வி கண்டு, கடைசியில் வாழைச்சேனை
ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போனாள். மேனாட்டு
வைத்தியத்தைக் கரைத்துக் குடித்தவரென்று
நம்பப்படும் அந்த டாக்டர் அவனை நன்கு
பரிசோதித்துப் பார்த்துவிட்டு, மேசையில் கிடந்த
வெள்ளைத் தாளில் கோழிக்கீறல் மாதிரி எதையோ
கிறிக்கிக் கொடுக்க, முத்தையா ஓடலியும் தண்ணீரில்
பலவித நிறங்களையும் ஊற்றிக் கலக்கி அடித்துக்
கொடுத்தார்.
எட்டுத் தடவைகளுக்கு தந்த மருந்து
முடிந்ததும் மீண்டும் அவனை அந்த டாக்டரிம்
அழைத்துச் செல்ல வேண்டும் என்றுதான்
பொன்னம்மாள் நினைத்திருந்தாள். அதற்கிடையில்
பக்கத்துவீட்டு வள்ளியக்காவின் இலவச ஆலோசனை
கொத்துவேலி போட்டு அவளைத் தடுத்தது.
ஷஷபொடிச்சி! ஆஸ்பத்திரி ஆஸ்பத்திரின்னு
பொடியனுக்கு பச்சத்தண்ணியெ வாங்கி ஊத்தினா
வருத்தம் சுகப்படாது. மாலைக்குள்ளெ புள்ளெ
எங்கெயும் பயந்திருப்பான். எதுக்கும் நம்மெட
காளியப்புவப் புடிச்சி, ஒரு குறிபார்த்து நூலக்
கட்டினா மூணு நாளிலே எல்லாம் பறந்திடும்
பொடிச்சி!||
வள்ளியக்கை லெக்கணமாக் கதைப்பா.
வள்ளியக்கையின் ஆலோசனையில் போதிய
நம்பிக்கை வைத்துத்தான், பொன்னம்மாள்
குறியெல்லாம் பார்த்து அச்சரமும் கட்டி கோழியும்
நேர்ந்தாள். மூன்று நாட்களுள் ஷஷகாரணம் காட்டும்||
என்ற உத்தரவாதத்திலே உண்மை இல்லாமல் நோய்
நீடித்தது.
காளியப்பர் லேசுப்பட்ட பேர்வழியல்லர்,
அவர் ஏழு நாட்கள் கெடுப்போட்டு தனக்குத் தெரிந்த
வைத்திய முறைகளையெல்லாம் செய்து பார்த்து
விட்டார். அவருடைய கெடு ஏழு நாளிலிருந்து -
இன்னுமொரு ஏழு நாளுக்கு இழுபட்டு மூன்று
மாதங்களாகியும் இன்னும் கெடு முறியவுமில்லை,
சுகம் கிடைக்கவுமில்லை.
ஒவ்வொரு நாளும் மாலைக்குள் வந்து....
ஷஷஏய் பொன்னம்மா செம்பிலே தண்ணியெ
எடு பொடிச்சி|| சொல்லிக் கொண்டே காளியப்பர்
கிருஷ;ணனின் தலைமாட்டுப் பக்கமாக அமர்ந்து
கொள்வார்.
உடனே பொன்னம்மாள் கைபடாது அள்ளிய
தண்ணீர்ச் செம்பையும் வேப்பங்குழையையும் அவர்
முன்னால் கொண்டு வந்து வைப்பாள்.
காளியப்பர் வெற்றிலையைப் பெட்டியில்
கிடக்கும் பாக்கு வெட்டியை எடுத்து, செம்பிற்குள்
குத்தினெ இறக்கி அலை எழுப்புவார்.
ஓம்! சரவண சண்முகா சத்துரு சங்கரா
அருகிரு முருகா ஆங்கார முருகா - எரிஎரி
திருதிரு
இவர்மேல் வரப்பட்ட பூதபிசாசு வஞ்சனைகளையெல்
லாம் உச்சாடு உச்சாடு நடுநசி விலகு விலகு
ஓடு ஓடு
இவரை விட்டு அகன்று போகவே சிவாக....
ஒவ்வொரு முறையும் அவர் ஓதி ஊதும்
போது உண்டாகும் காற்றோடு - வெற்றிலைப்
பாணியும் வீணியும் கலந்து, தூறல் மழைபோல
அந்தச் செம்பு நீரில் படிவது அவருடைய மந்திரம்
ஓதும் கிரியையின் ஒரு
கிருபையாகும்.
ஓதி முடிந்ததும்
வேப்பங்குழையைத்
தண்ணீரில் துவட்டி அவன்
முகத்தில் ஷசரே|லென
அடிப்பார். ஈ விழுந்தாலும்
ஈட்டி குத்தியதுபோன்று
வலி எடுக்கும்
கிருஷ;ணனின் நொந்த
உடம்பில் காளியப்பர் தன்
ஷஷகை இருப்பு||க் காட்டி
வேப்பங்குளையால்
அடித்துக்
கொண்டுடிருக்கும்போதே
இருமலும் தொடங்கிவிடும்.
மரண அவஸ்த்தையோடு
இருமிக் கொண்டே
படிக்கத்தில் காறி
உமிழும்போது சளியில் இரத்தத் துணுக்குகள்
புரையோடிப்பதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்
லை.
மந்திரம் ஓதும் சடங்குகள் தினமும் கிரமப்
பிரகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாள்களில்,
ஒருநாள் கிருஷ;ணனை அவனுடைய வகுப்பாசிரியரும்
பார்க்க வந்தார். அவருக்கு உண்மை இலேசாக
விளங்கியது.
உடனே பொன்னம்மாவை ஒரு பக்கமாக
அழைத்து,
ஷஷஅம்மா! கிருஷ;ணனை இப்படியே
வைத்திருப்பது நல்லதல்ல. பெரியாஸ்பத்திரிக்கு
கொண்டு போனால் அவர்கள் படம்பிடித்துப் பார்த்து
நல்ல மருந்தும் செய்வார்கள். பயப்படாமல் கொண்டு
போங்கள்|| என்றார்.
பொன்னம்மாவின் மனத்திலே
குடிகொண்டிருந்த ஷஷகரையாக்கன் பேய்|| பற்றிய பீதி
ஆசிரியரின் அக்கறையான அறிவுரையை
விரட்டியடித்தது.
என்றுமில்லாதவாறு அன்று கிருஷ;ணன் ஒரு
கவளம் சோறும் சாப்பிட்டு, பழைய சிரிப்பின்
சாயரையும் ஒரு முறை கோடிகாட்டினான்.
பொன்னம்மாளின் முகத்தில் செவ்வரத்தையின்
ஊடுருவல். அவள் மனத்திற்குள் காளியப்பரைச்
சங்கை கூர்ந்தாள்.
ஷஷஓமோம் இண்டெய்க்கி செய்கிறெ கழுப்பிலெ
எல்லாம் சரியாப்போகும்.||
தனக்குத்தானே உள்ளகமாகக் கூறிக்
கொண்டாள். பொழுதும் புளியடித்துறைப் பக்கமாக
கெளிந்து விட்டது. அவள் கழிப்புக்குத் தேவையான
பொருட்களையெல்லாம் ஒழுங்குபடுத்துவதில்
மும்முரமாக ஈடுபட்டாள்.
வெள்ளைத் தோட்டுப்பாயை எடுத்து -
வள்ளியக்காவும் தானுமாக ஓடி ஆடிச் சேர்த்த
வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, பூசணிக்காய்,
கரையாக்கன் பூக்கள்.....
அவற்றையெல்லாம் பார்க்கும்போது ஊமை
மகிழ்ச்சி அவள் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்தது.
ஷஷஎன்டெ பிள்ளெ இன்னெம் நாலு நாளையிலெ
எழும்பிப் பள்ளிக்குப் போயிடுவான்||. மனம்
ஆறியதில், கவலை சற்றே விலகியது.
ஷஷபொன்னம்மா பாமிலெ பத்துமணி விசிலும்
ஊதிட்டிது. எல்லாத்தையும் ஆயத்தப்படுத்தி எடு. நான்
சின்னப்பொடிச்சியையும் காளியப்பரையும் கூட்டிட்டு
வாறென்||
வள்ளியக்கா குரல் கொடுத்தாள்.
அவள் அவசரப்படுத்திக்
கொண்டிருக்கும்போதே காளியப்பரின் குரலும்
கடப்பைத் தாண்டியது.
ஷஷஎன்னெ பொடிச்சி எல்லாஞ்செரியா? பொடியனெக்
கூட்டிட்டு வெளிக்கிடென்||.
வழக்கமாகப் போடுவதை விட, அன்று அவர்
கொஞ்சம் கூடத்தான் ஷஷபாவி||த்திருந்தார். அதன்மூலம்
ஷஷகரையாக்கனை|| மடக்கும் பக்குவம் தனக்கு
வந்துவிட்டதான தைரியம். அவரின் கட்டளையைத்
தொடர்ந்து காரியங்கள் விரைவாகின.
செழிப்பினைத் தாங்கிய அந்தப்
பென்னம்பெரிய ஆலமரம். அடர்ந்து, பரந்து செறிந்த
அதன் கிளைகளில் வெளவால்களின் -
ஷஷக்யூகீக்!|| செண்பகங்களின்
ஷஷமர்ஹ்ம்ஹ்... ஹ்ம்!||
இரவின் அயர்வுக்குச் சுருதி
சேர்த்துக் கொண்டிருந்த மாரிக்கால
தவளைகளின் அலறலும் இவற்றுடன்
சேர்ந்த போது அந்தச் சூழலுக்கு ஒரு
பயங்கரம் பொருத்திற்று.
காளியப்பர் காரியத்தில் இறங்கினார்.
பக்குவமாகப் பரப்பியிருந்த
சாமான்களுக்கு மத்தியிலிருந்த கற்பூரத்
தட்டை எடுத்தார். அவரின்
கரங்களிரண்டும் தன்னியல்பாகவே
கிருஷ;ணனின் தலையைச்
சுற்றவாரம்பித்தன. தனக்க வாலாயமான
மந்திரம் என்ற சொற்களின்
கோர்வையை அதரங்கள்
உருட்டத்தொடங்கியதில், வார்த்தைகளின்
உச்சாடனம் ஓங்க அவரின்
உடம்பும் குரலும் நடுங்கத்தொடங்கின. அவர் பாவித்த
சாமானின் கைங்கரியமும் அவருக்குத் துணைவந்தன
போலும்.
அவருடைய ஆட்டத்திலும், வார்த்தைகளின்
உருட்டலிலும் அனைவரும் கட்டுண்டுகிடந்தார்கள்.
கிருஷ;ணன் நோயாளி என்கின்ற முக்கியத்துவம்
அனைவரின் மனதினின்றும் நீங்கியிருந்தது.
காளியப்பரே மையமானார்.
சடுதியாக கிருஷ;ணன் அடக்கமுடியாத
அவஸ்த்தையுடன் இருமத் தொடங்கினான்.
பொன்னம்மாள் பதறிப் போய் மகனை நெஞ்சோடு
அணைத்துக் கொண்டாள்.
அவனுடைய வாய்வழியாக இரத்தக் கட்டிகள்
கொப்பளித்து வடியலாயின. அந்தக் கொடூரம்
பொன்னம்மாளின் வயிற்றில் தீ மூட்டியது.
அவனுடைய நிலையைக் கண்ட
காளியப்பருக்கு ஷஉஷhர்| வெறி தலைக்கேற, மந்திர
உச்சாடனத்தை உச்சச் சருதிக்குக் கொண்டு சென்றார்.
இருமிக் களைத்த கிருஷ;ணனின் கண்கள்
தாயின் முகத்தைப் பரிவுடன் நோக்கிய நிலையில்
ஷவெறித்து| நின்றன.
வாழ்க்கையின் முழு நிதியத்தையும் இழந்த
ஆவேசத்துடன், அந்த இடுகாட்டுப் பிரதேசம் நடுங்க
பொன்னம்மாள் ஒப்பாரி வைத்தாள்.
ஷஷஐயோ! ஆரோ தீட்டுக்காரியும் இஞ்செய
வந்திட்டாடி.... ய்.... அதான் கோவப் பார்வையிலே
கரையாக்கென் அடிச்சிப்போட்டிய்ய...!||
வள்ளியக்காவும் அவளுடன் கோரஸ்
ஆனாள். - 1968 -
தீட்டு
எஸ்.எஸ்.எம். ஹனிபா

சிறுகதைகள் இங்கே

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…