Post by Thiru
- Mar 23, 2018
'பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் கோரப் பிடியில் தமிழ்பேசும் முஸ்லீம்கள்'  என்ற தலைப்பில் நேற்று (22.03.2018) ஸ்காபுறோ ...

வருணாசிரம ஒடுக்கலாலும் இன
ஆதிக்கத்தாலும் தமிழர்கள் இழந்தவைகளில் கலையும்
ஒன்று. கலைகளில் தமிழரின் ஈடுபாடு முழுமையாக
இன்மையினாலேய எமது விழுமியங்களை பிற,
ஆதிக்கக் கலை வடிவங்களிடம் இழந்து
வந்திருக்கிறோம்.
கலைகளின் வழி மொழியின் வேர்கள் தாங்கிப்
பிடிக்கப்படுகின்றன. கலை வடிவங்களில் மக்களைச்
சந்திப்பவர்கள் தாங்கள் பலவிலைகளைக் கொடுத்தே
அதைச் செய்கின்றனார்கள். எனவே அவர்கள்
எக்கலைப் பிரிவினராயனும் மக்களினூடு சமூகத்திற்கு
ஏதாவது ஓர் பங்களிப்பைச் செய்துவருகின்றார்கள்.
அந்த வகையில் இந்த முறை திரைப்படம் மற்றும்
நாடகத்துறையில் ஊக்கமுடன் ஈடுபட்டுவரும்
திரு தனபாலன் அவர்களைச் சந்திக்கிறோம்.

நேர்முகம்: தேன்மொழியாள்

 

நேர்காணல்
புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் இன்ற கனடாவை
வாழிடமாகவும் கொண்ட திரு.தனபாலன் அவர்கள்,
கனடாவில் திரைப்படத் துறையிலும், நாடகத்
துறையிலும் தனது கால்களை நன்கு பதித்துள்ளவர்.
கரைதேடும் தேடும் கலைகள் மூலம் கனடிய
மக்களுக்கு நன்கு அறிமுகமாகியுள்ளவர். சிறுவயது
முதற்கொண்டு நாடகக்கலையில் ஆர்வம் கொண்ட
இவர், இன்று ஓர் இயக்குனராகப் பணியாற்றி
வருகின்றார்.


கேள்வி :நீங்கள் நாடகத்துறை மூலமும்
திரைப்படத்துறை மூலமும் கனடியத் தமிழ் மக்களுக்கு
நன்கு அறிமுகமாகியுள்ளீர்கள். உங்களை இந்தவாரம்
சந்திப்பதில் முழக்கம் பெருமை கொள்கிறது.


தனபாலன்: ஆமாம் நான் ஒரு நாடக,
திரைப்படத்துறை ஆர்வலன். அந்த வகையில்
முழக்கம் இதழ் என்னைப்
பெருமைப்படுத்துவதையிட்டு மிகவும்
மனமகிழ்ச்சியடைகின்றேன். நன்றி.


கேள்வி:  நீங்கள் ஒரு திரைப்பட இயக்குனராகவும்
நாடக இயக்குனராகவும் இருக்கிறீர்கள். இக்கலை
உங்களிடம் இயல்பாகவே உருவாகியவையா?
அல்லது பெற்றோர், நண்பர்கள், ஆசிரியர்கள் என்று
யார் மூலமாகவாவது உருவாகியவையா?


தனபாலன்: உண்மையில்
இத்தகைய ஆர்வம் என்னிடம்
இயல்பாகவே உருவானவை
என்று சொல்லமாட்டேன்.
சண்முகநாதன் என்னும்
என்னுடைய நண்பர், ஏன்
குரு என்று கூடச்
சொல்லமுடியும். அவர்தான்
எனக்கு சிறுவயது
முதற்கொண்டு நாடகத்துறையில் ஆர்வத்தை
ஊட்டியவர். எனது ஒவ்வொரு செயற்பாட்டிற்கும்
ஆக்கமும் ஊக்கமும் கொடுத்தவர் அவர்.
இளம்பருவத்தில் வேறு சிந்தனையில்
மனம்போகவிடாது சனசமூக நிலையத்தினூடாக
என்னை நெறிப்படுத்தியவர். நான் எனது சிறுவயது
முதற்கொண்டு கனடா வருவது வரை அவரது
வழிகாட்டல் தான் என்னை உருவாக்கியது என்று
சொல்வேன்.


கேள்வி:  கரைதேடும் அலைகள்| என்ற
படத்தின்மூலம் மூலம் நீங்கள் திரைப்படத்துறையில்
கால் பதித்துள்ளீர்கள். இதற்கு முன்னர் இது சார்ந்த
பட்டறிவு ஏதாவது உங்களுக்கு இருந்ததுண்டா?


தனபாலன்: ஆமாம் நான் சிறுவயது முதற்கொண்டு
நாடக நடிகனாக இருந்திருக்கின்றேன். எனது பதினைந்
தாவது வயதில் ஷஅந்தஸ்து| என்ற நாடகத்தில்
நடித்தேன். அந்த நாடகம் பாடசாலை மட்டத்தில்
மிகவும் பெருமைப்படுத்திப் பேசப்பட்டது. அதன்மூலம்
நானும் பெருமைப்படுத்தப்பட்டேன். அதன் பிறகு
தொடர்ந்து நாடகங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்புக்கள்
வந்தன. கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில்
பயின்றபோது நாடகங்கள் பலவற்றை இயக்கி
நடித்திருக்கின்றேன். அங்கே விசுவாமித்திரர்| என்ற
நாடகத்தில் சிறந்த நடிகர் என்ற பரிசு எனக்குக்
கிடைத்தது. பின்னர் நான் ஆசிரியராகப் பணியாற்றிய
காலங்களில் எனது மாணவர்களை வைத்து பல
நாடகங்களை இயக்கி மேடையேற்றியிருக்கின்றேன்.
கனடா வந்தபிற்பாடு கலை பண்பாட்டுக்
கழகத்தினருடன் இணைந்து பல நாடகங்களில்
நடித்தும் இருக்கின்றேன். இயக்கியும் இருக்கின்றேன்.
அண்மையில் கூட உறுதிப்பூக்கள் நிகழ்வின் போது
வீட்டுக்கு வீடு| என்ற நாடகத்தை மேடையேற்றினேன்.
இதன்மூலம் கிடைத்த பட்டறிவு திரைத்துறை என்ற
பாரிய துறையினுள் நுழைய நம்பிக்கையைத் தந்தது.

கேள்வி: கரைதேடும் அலைகள்| திரைப்படம்
எப்போது வெளிவந்தது?


தனபாலன்: இதற்கு நான் எடுத்துக் கொண்ட காலம்
மிக நீண்டது. 1999இல் எடுக்கத்தொடங்கி, கிட்டத்தட்ட
மூன்று ஆண்டுகளின் பின்னரே திரையிட முடிந்தது.
இத்திரைப்படம் 2002ஆம் ஆண்டு கனடாவில்
திரையிடப்பட்டது.

கேள்வி:  இ;வ்வளவு காலம் உங்களுக்கு
எடுத்ததற்கான பின்னணி என்ன?


தனபாலன்: முதலாவது கனடாவில் இருக்கக்கூடிய
நேரப் பற்றாக்குறை. கலைஞர்களை வார இறுதி
நாட்களிலேயே சந்திக்க முடியும். மற்றது பாடல்கள்
அனைத்தையும் நாமே எழுதி அதற்கு வேண்டிய
இசை போன்ற விடயங்களைக் கவனித்து நடித்து
திரையேற்றக் காலம் எடுத்தது.

கேள்வி: இத்திரைப்படத்தின் கதை எதைப்பற்றியது?


தனபாலன்: கதை புலப்பெயர்வு சார்ந்தது. வன்னிக்கு
இடம் பெயர்ந்த குடும்பம் ஒன்றைப் பற்றியும்
கனடாவிற்குப் புலம்பெயர்ந்த குடும்பம்
ஒன்றைப்பற்றியும் கதை பின்னிச்செல்கிறது. இதற்குள்
வாழ்க்கைப்போராட்டம், விடுதலைப்போராட்டம்,
குடும்ப அங்கத்தவர்களிடையே உள்ள
உறவுப்போராட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள்
கதையைக் கொண்டு செல்கின்றன. இத்திரைப்படத்தில்
தென்னிந்தியத் திரைப்படப்பாடகர் திரு வு.டு.மாகராஜன்
ஒரு பாடல் பாடியிருக்கிறார். அனைவரும்
பார்க்கவேண்டிய படம்.


கேள்வி: இத் திரைப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பு
ஃவிமர்சனம் பற்றிக் கூறுங்கள்?


தனபாலன்: நிச்சயமாக ஈழத்தமிழர் மத்தியில் நல்ல
வரவேற்புக் கிடைத்தது. திரையரங்கில் தொடர்ந்து
மூன்று கிழமைகள் ஓடியது. ஓர் ஆண்டின் பின்னர்
ஏழு காட்சிகள் ஓடியிருக்கின்றன. இப்போதும்
இடையிடையே அத்திரைப்படத்தை ஒரு முறை
திரையரங்கத்தில் போடு என்று கேட்பவர்களும்
உண்டு. கடைகளில் விற்பனைக்கு வைத்த அத்தனை
ஒளிநாடாக்களும் விற்கப்பட்டுவிட்டன. இதுவும்
வெற்றிக்கான ஒரு சான்றாகவே நான் கருதுகின்றேன்.
அது தவிர பலரும் தொலைபேசியில் அழைத்து,
இந்தக் கதை என்னுடைய சொந்தக்கதை போல
இருக்கிறது. வந்தநாள் முதற்கொண்டு என்னுடைய
சகோதரர்களுக்காகப் பாடுபட்டேன். ஆனால் இன்று நீ
ஆர் என்று கேட்கிறார்கள். என்னுடைய துக்கத்துக்கு
ஒரு வடிகாலாக இருக்கிறது' போன்ற விமர்சனங்கள்
வந்திருக்கின்றன. மேலும் திரு.வைரமுத்து
சொர்ணலிங்கம் அவர்கள் இத்திரைப்படத்தை
ஒன்றிற்கு இரண்டு தடவைகள் பார்த்து விட்டு
செய்தித்தாள் ஒன்றில் விமர்சனம் எழுதினார். திரு.சாமி
அப்பாத்துரை அவர்களும் நல்ல ஒரு விமர்சனம்
எழுதியிருக்கிறார்.


கேள்வி: பொருளாதார ரீதியில் இத்திரைப்படத்தின்
வெற்றி பற்றிச் சொல்லமுடியுமா?


தனபாலன்: உண்மையில் எனது நோக்கம் பணம்
அல்ல. நான் விடுதலைப்போராட்டத்தில் நாட்டம்
கொண்டவன். அதனை திரைப்படத்தின் மூலம்
வெளிப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால்
பொருளாதார மட்டத்தில் எனக்கு அதிகளவு இலாபம்
இல்லைத்தான். அதற்கு முக்கிய காரணம்
திரைப்படத்தின் தரம் என்பதல்ல. எனக்குச்
சந்தைப்படுத்தக்கூடிய திறன் இல்லையென்றே
கருதுகின்றேன். இதற்கென ஒரு தனித்திறன்
வேண்டுமல்லவா?


கேள்வி: இத்திரைப்படம் கனடா தவிர்ந்த வேறு தமிழர்
வாழும் நாடுகளில் திரையிடப்பட்டதா?
தனபாலன்: ஆமாம். பாரிஸில் பல தடவைகள்
திரையிடப்பட்டது. அது தவிர தமிழீழம் வன்னியில்
இதன் ஒளிநாடாவைப் பலரும் பார்த்ததாக
அறிகின்றேன்.


கேள்வி: மேலும் தொடர்ச்சியாக ஏதாவது திரைப்படம்
இயக்கும் எண்ணம் உண்டா?


தனபாலன்: ஆமாம். ஷவாலிபதேசம்| என்றொரு
திரைப்படத்திற்குரிய கதை எல்லாம்
வடிவமைக்கப்பட்டு விட்டது. இதில் நடிப்பதற்குரிய
நடிகையர் சார்பில் சிறு சிக்கல்கள் உள்ளன.
அவர்கள் இப்போது தமது கல்வியில் அதிகளவு
அக்கறை செலுத்துவதால் தாமதமாக இருக்கிறது. ஒரு
நல்ல நடிகை கிடைத்துவிட்டால் நான் மேற்கொண்டு
அத் திரைப்படத்தை நகர்த்திச் செல்லமுடியும்.
இத்திரைப்படம் முற்று முழுதாக இளைஞர்களின்
சிக்கல்களை முன்னிலைப்படுத்தி எடுக்கப்போகும்
திரைப்படம்.


கேள்வி: நல்லது. வெற்றிபெற வாழ்த்துகள்.
திரைப்படம் நாடகம் போன்ற துறைகள் தவிர வேறு
உங்கள் ஈடுபாடுகள் என்ன?


தனபாலன்: இலக்கிய ஆர்வம் நிறைய உண்டு.
அதனை மேலும் வளர்த்துக் கொள்ள தற்போது
தமிழ்க்கலைத் தொழில்நுட்பக் கல்லூரி
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழத்துடன்
இணைந்து நடத்தும் இளம்கலைப் பட்டப்படிப்பில்
இணைந்து படிக்கிறேன். அது தவிர எங்கள் ஊர்
பழைய மாணவர்; சங்கத்தின் தலைவராக
இருந்திருக்கிறேன். சங்கத்தின் செயற்பாடுகளில்
இணைந்து செயற்பட்டுவருகின்றேன்.

கேள்வி: உங்களது குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்.
இவர்கள் உங்களுடைய கலைத்துறை வாழ்க்கைக்கு
உதவியாக இருக்கிறார்களா?

தனபாலன்: அப்பா சிறுவயதில் தவறிவிட்டார்.
அண்ணர்மார் தான். சகோதரிகள் எனக்கு
இல்லை. அதனால் குடும்பப்பொறுப்பு அதிகம்
இல்லாததால் நான் நினைத்ததை அப்வப்போது
செய்ய முடிகிறது. மனைவி குடும்பத்தலைவி.
நான்கு குழந்தைகளில் ஒரு குழந்தை இந்திய
இராணுவத்தினரின் ஆட்சிக் காலத்தில் இறந்து
விட்டது. அம்மா எனது நாடகம், திரைப்படம்
என்பனவற்றைப் பார்த்துவிட்டு உற்சாகப்படுத்துவார்.
ஆலோசனைகள் வழங்குவார்.

கேள்வி:  முழக்கம் செய்தித்தாள் பற்றி உங்கள்
மதிப்பீடு என்ன?
தனபாலன்: ஒரு தரமான செய்தித்தாள். தேச
விடுதலையை, செய்தித்தாள் தொடங்கிய
காலத்திலிருந்து இன்று வரை ஒரே தன்மையான
பார்வையில் பார்த்து வரும் ஒரே இதழ்.
மூடநம்பிக்கையை முற்றாக ஒழித்து,
ஆன்மீகத்தை தவிர்த்து வரும் ஓர் இதழ் என்ற
வகையில் முழக்கத்தைப் பார்க்கலாம். ஆனால்
ஆன்மீக ஈடுபாட்டைத் தவிர்ப்பது எவ்வளவுக்குப்
பொருத்தம் என்று எனக்குத் தெரியவில்லை.........
மேலும் முழக்கம் நாட்டுச் சிக்கல்கள் அதிகமாக
இருந்த காலத்தில் கனடாவிலும் அது பற்றிப் பேசப்
பயப்பிடும் காலத்திலும் கூட, தேசியத்தை
முன்னெடுப்பதில் மாறாத கொள்கையையே
கடைப்பிடிக்கிறது.
அத்துடன் இதழியல் அறம் என்பதை முழக்கம்
கடைப்பிடித்து
வருகிறது என்றே
சொல்லவேண்டும்.
தான் விட்ட
தவறுகளுக்கு
மன்னிப்புக்
கேட்பதிலும் மறுப்புத்
தெரிவிப்பதிலும்
முழக்கம் என்றும்
பின்னிற்பதில்லை.

கேள்வி: நன்றி.
இவ்வளவு நேரமும்
உங்களுடைய
நேரத்தையும்
பொருட்படுத்தாமல்
எங்களுடன் இந்த
நேர்காணலில்
பங்குகொண்டு
பயனுள்ள
கருத்துக்களைப் பரிமாறிக்
கொண்டதற்கு
மீண்டும் நன்றியைத் தெரிவித்துக்கொள்ளும்
வேளையில் உங்களுடைய கலையுலக வாழ்க்கை
மேலும் வெற்றிபெற முழக்கம் மனமார வாழ்த்துகிறது.


தனபாலன்: நன்றி. இலைமறைகாயாக ஆங்காங்கே
இருக்கும் திறமையாளர்களைத் தேடிப்பிடித்து மக்கள்
மத்தியில் அறிமுகம் செய்து வைப்பதில் முழக்கம்
முன்னிலை வகிக்கிறது என்றே சொல்லவேண்டும்.
அந்த வகையில் இந்தவாரம் என்னுடைய நேரம் என்று.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…